பிறந்தநாள் வாழ்த்து செல்வன் யாழ்னின்.29.12.2013


யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.
   அன்புச்செல்வன் யாழவன்னின் பிறந்த .29.12.2013.இன்று இவரை அன்பு அப்பாஅம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் லோவிதன் அண்ணாகுடும்பத்தினரும் .தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.

 

துளசிமணி மாலை அணிவது ஏன்?

தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று துளசி. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் துளசி என்று பெயர். துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன்

 அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று.

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை!

மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான்.

 நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.

ஐயப்ப தரிசனம் ஐயப்பனின் வரலாறு


மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.
தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று

அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
 

ஆன்மிகம் என்றால் என்ன?


ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,

 இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிந்திக்க வைக்கும் நாவலர் பெருமானின்


  குட்டிக் கதைகள் அறியாண்மைகள் "ஒரு செல்வந்தன் தன் பிதாவுக்கு ஒரு ஓட்டிலே கஞ்சி வார்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தானாம்.  அவன் பிள்ளை ஒருவன் நீண்ட நாளாக தந்தையின் செயலை பார்த்த படியே இருந்தான் ஆனால் அவன் இதயத்தில் வேதனை பொங்கி வழிந்தது. ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஓளித்து வைத்து விட்டான். அந்த செல்வந்தத்  தந்தை மாலை உணவைத் தன் தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத் தேடிவிட்டு  தந்தையாரிடம்  அந்த ஓடு எங்கே எனக் கேட்டார். அவரோ நானறியேன் பராபரமே என்றாராம். உடனே தனது மகனிடம் சென்று தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக்

காணவில்லை. நீ கண்டாயா என வினவி அதட்டிக் கேட்டாராம். அவனும் தெரியாது என சொல்லவும் கோபத்துடன் தந்தையாரின் பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையாரை அடித்து விரட்டி எங்கே உனது ஓடு என்று கோபமாக சண்டையிட்டாராம். இதைக்கவனித்தக் கொண்டிருந்த மகன் பெருவேதனையோடு ஓடிச் சென்று. தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி அந்த ஓடு என்னிடம் தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் பெரியவனானபின்  உங்களுக்கும்  முதுமை வரும் தானே. அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாறவேண்டி வரும். அதற்கு  அப்போது இப்படி ஓடு எடுப்பது கஸ்டம். அதற்காக நான் அதை எடுத்து உங்களுக்காக பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றானாம். அப்போது தான் அந்தச் செல்வந்தனுக்கு பிரமை அழிந்து தன் செயலைப் பற்றித் தெளிவு பிறந்ததாம். வெட்கமும், வேதனையும் பிறந்து. அந்தக் கணம் முதல் தன் தந்தையை கௌரவமாக பாதுகாக்க தொடங்கினானாம்.
                           
இடையன்

 ஒருபாடகன் தனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடி தலையை அசைத்தக் கொண்டு சங்கீதம் பாடிய படி இருந்தான். அந்த தெரு வீதியால் சென்ற மக்கள் எல்லாம்  அவனை சுற்றி நின்றபடி பாட்டை ரசித்துக் கொண்டு நின்றார்களாம். அப்போது    அந்த  வழியாக ஒரு ஆடுமேக்கும் இடையனும் வந்து இந்தக் கூட்டத்தை பார்த்து தானும் சற்று தாமதித்து நின்றபடி அவனின் பாட்டை கேட்டுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் சென்றதும் ஓவென்று அழுதானாம். நின்றவர்கள் அனைவரும் இவன் பாட்டின் இரசனையின் மிகுதியால் மகிழ்ச்சியில் அழுகிறானாக்கும் என நம்பி அவனுக்கு தேறுதல்

சொன்னார்களாம். உடனே அவன் விழிப்படைந்து நான் அழுதது இவனுக்கு கண்டிருக்கும் நோயைப்பற்றித்தான். எனது மந்தையில்  ஒரு ஆடு இப்படித்தான் தலையை ஆட்டியபடி கத்திவிட்டு எந்த மருந்து செய்தும் நோய் மாறாது சிறு நேரம் செல்ல இறந்து விட்டது. அதனால் இவரின் நோய்க்கு கையில் இரும்பு காச்சிச் சுட்டால் தலை ஆட்டம் நின்றுவிடும் என்றானாம். கூடி நின்றவர்கள் அவனின் அறியாண்மையை நினைத்து

நுணாவில் குளம் கண்ணகை அம்மன்


நுணாவில் மேற்கு நுணாவில் சாவகச்சேரி
நுணாவில் குளம் கண்ணகை அம்மன் கோவில் திருவம்ப பஜனை

ஐயப்பன்மண்டல விரத பாத யாத்திரை.31/12/2013.

 ""அருள் ஸ்ரீ ஐயப்பஅடிஜார்களுக்குஓர் தர்ரிசனஅழைப்பு** சூறிச்ல் காலம்- !..31/12/2013
சூறிச் கிருஷ்ணர் ஆலயத்தில் இருந்தது இரவு 10.00 மணிக்கு ஆரம்பம்.
பக்தர்களை அன்புடன் அழைக்கின்றோம் .
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா சாஸ்தா பீடம்   " சாமிசரணம் சரணம் ஐயப்பா"

 

வரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை

முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும்,

வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷ்ண தேவி பூஜை மிகவும் சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
லட்சுமி பூஜை பற்றிய புராண கதை

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது

லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. ஏதோ பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. லட்சுமி தேவி ஒரு இடத்திற்கு வருவது சாமான்ய காரியமல்ல. அரண்மனையை தேடி வந்தவளை விரட்டினாள் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு? மணி மகுடத்தையும், செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.

அந்த இடத்தை விட்டு அகன்ற மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலைபோல் செல்வம் குவியத் தொடங்கியது. பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே   ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது.

இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா, வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து, அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இதனால் இழந்த செல்வங்களை மட்டும் இன்றி ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பூஜை செய்வது எப்படி?
ஒரு மனையில் கோலம் போட்டு லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

பிள்ளையாருக்கு 21 பெயர்கள்

எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே.
கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?
கணேசன்:
உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.
ஏகதந்தன்: 
ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம். 
சிந்தாமணி:
சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.
விநாயகன்:
வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.
டுண்டிராஜன்:
மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.
மயூரேசன்:
வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன்.
லம்போதரன்:
உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன்.
கஜானனன்:
ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.
ஹேரம்பன்: 
ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.
வக்ர துண்டன்:
பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.
ஜேஷ்டராஜன்:
ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.
நிஜஸ்திதி:
உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.
ஆசாபூரன்:
எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.
வரதன்: 
வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.
விகடராஜன்:
மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.
தரணிதரன்:
பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.
சித்தி - புத்தி பதி:
சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.
பிரும்மணஸ்தபதி: 
இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.
மாங்கல்யேசர்:
அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர்.
சர்வ பூஜ்யர்:
எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.
விக்னராஜன்:
தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் ஒன்று

பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது   திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது  எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக 
வந்போது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது  தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது  பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக
 வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க
ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப்பாடலை விமலும் தேவன்ராஐாவும் நானும் 
எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் எஸ‌்.ரி.எஸ‌் கலையம் இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது சிறந்த பணியாக கருதுகின்றது.
 (குறிப்பாக)இந்தக்கலைஞன்
மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு கலைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலைஞன் இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை ஆனாலும் இவர் திறன் அறிந்தேன் அதனால் இவரையும் இணைத்து இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.இவர்கள் கலைவா ழ்வு உயர வாழ்த்துக்கள்.  
 01 ஜூன், 2013 அன்று வெளியிடப்பட்டது
நட்புடன் .ஈழத்து இசைத்தென்றல் s.தேவராசா..
Powered by Blogger.