முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்???

தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஊட்டச்சத்து குறைவு
நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும்.
அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.
பரம்பரை
ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும்.
ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.
அதிக எடை
நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான்.
ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது.
இதனால் முதுகு வளைந்து கூன் உண்டாகி இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.
பழக்கம்
சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும்.
உதாரணமாக நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது.
மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.
கணனி வேலை
முதுகு வலி பெரும்பாலான கணனி முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது.
ஏனெனில் கணனி முன்பு வேலை செய்யும் போது கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும்.
இதனால் முதுகை நேராக வைக்காமல் நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால் அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.
ஃபேஷன்
ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும்.
அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.

குடல் புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

26.11.2012.By.Lovi.உலகம் முழுவதிலும் புற்றுநோய் வேகமாக பரவி வரும் நோய்களில் ஒன்றாக மாறி வருகின்றது. குடல் புற்றுநோயினால் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கு மருந்து மாத்திரை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது குடல் புற்றுநோயின் வேகத்தை குறைக்க நிபுணர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
அப்ளி பெர் செட் என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து புற்றுநோய் செல்கள் மேலும் பரவாமல் தடுக்கிறது. இதன் மூலம் புற்றுநோயின் வீரியம் குறையும்.
இங்கிலாந்தில் உள்ள 1400 நோயாளிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் நல்ல பலன் கிடைத்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாப்பிட்ட 30 நிமிடத்தில் இந்த மருந்து செயல்பட தொடங்கும் என்றும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது. பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

கலியுகம் எப்போது முடியும்?

 
 
 
கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு மிகப்பெரிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கி தான் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
Super-Jupiter என்று பெயரிட்டுள்ள இந்த புதிய கிரகமானது, Kappa Adromedae b என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது.
இந்த நட்சத்திரமும் சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாம். ஆனால் இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் Super-Jupiter-ன் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்த கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது.
வழக்கமாக ஒரு நடத்திரத்தை (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களை கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் இங்கு முதலில் Super-Jupiter தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே Kappa Adromedae b என்ற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கல்லடைப்புக்கு – தாம்பூலம் !


15.11.2012.By.Lovi.எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்

வைரஸ் காய்ச்சலுக்கு - நிலவேம்பு பொடி !

   

By.Lovi. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது;
ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச்
சாப்பிடுவது நல்லது.
* இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து
சாப்பிடலாம்.
* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டா லும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம்; ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்

பெண்கள் இதய நோயை தக்காளி கட்டுப்படுத்தும் !

      
12.11.2012.By.Lovi.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.
அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்.

பிறந்தநள்வாழ்த்து லோவிதன்{ 9.11.2012.}

09.11.2012.By.Rajah.நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் தனதுஇல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார்சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று  சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் வாசகர்களும் வாழ்த்துகின்றனர்

அரிப்பு ஏற்படும்! உடல் தடிப்புகள் உருவாகும்

        
09.11.2012.By.Lovi..உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும். உடல் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். அலர்ஜியை குணப்படுத்த முடியும். சில அலர்ஜிக்கு 3 நாள் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். 3 மாதம், 9 மாதம், ஒரு ஆண்டு கூட சிகிச்சை பெறவேண்டியது இருக்கும். எந்த உணவுகளை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படுகிறதோ அதனை உட்கொள்ள கூடாது.

காலை எழுந்தவுடன் விடாது தும்மல்.... கண்களில் தொடர்ந்து நீர் வடிதல்....இவை எல்லாம் அலர்ஜியின் அடையாளங்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அலர்ஜி பாதிப்பு அதிகம் என நம்பிக்கொண்டிருந்த காலம் போயே போச்சு. இப்போது இந்திய மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் ஏதாவது ஒரு அலர்ஜி பாதிப்புக்கு ஆளாகின்றனர் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உணவு பொருட்கள் மூலம் ஏற்படும் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களில் 30 ஆயிரம் பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 100 முதல் 200 பேர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை பெறமுடியாமல் இறந்து விடுகின்றனர். அலர்ஜி ஒரு நோயா...எப்படி எப்படி ஏற்படுகிறது. விளக்குகிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மன்வீன்கார்.

அலர்ஜி என்பது நோய் அல்ல. அது உடலில் ஏற்படுத்தும் திடீர் மாற்றம். இதற்கு பிரதான காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை. சில உணவுவகைகளை உட்கொண்டால் உடம்பில் தழும்புகள் போல் காணப்படும். இது அலர்ஜியாகும். மீன் வகையில் பிரான்ஸ் உட்கொண்டால் சிலருக்கு சேராது. உடலில் தடுப்புகள் ஏற்படும். கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்து வராது. பெரும்பாலனவர்களுக்கு மாத்திரை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். பூச்சி கடித்தாலும் உடலில் அரிப்பு ஏற்படும்.

இதுவும் அலர்ஜிதான். வெயில் உடலில் பட்டால் சிலருக்கு முகம், கை ஆகியவற்றில் வட்டவடிவில் தழும்பு ஏற்படும். பூக்களில் உள்ள மகரந்த து�ள் காற்றில் பரவி உடம்பில் பட்டால் அலர்ஜி உருவாகும். உதாரணமாக பார்த்தீனிய செடியின் பூக்களில் இருந்து மகரந்த தூள் காற்றில் பரவி அது உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும். தண்ணீர் குடித்தாலும் அலர்ஜி வரும். அதனை தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபதாகிவிடும். அலர்ஜியால் உடம்பில் கொப்பளம் போல் உருவாகும். அது வெடித்து புண்ணாகி அரிப்பு ஏற்பட்டு சீல் உருவாகி ஜூரம் ஏற்படும். இப்படி பலதரப்பட்ட நோய்கள் உருவாகும். எனவே உடம்பில் தடிப்போ, அரிப்போ, திட்டு திட்டாக உருவாதல், கொப்பளம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்றால் இதற்கு நிரந்த தீர்வு காணமுடியும்

ஆகாயத்தாமரை! வெப்பு தணித்து தாகம் குறைக்கும் !

           08.11.2012.B.Rajah..நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்

மன உளைச்சல் மாரடைப்புக்கான சாத்தியங்களை அறிந்து கொள்ளலாம்!

          
 
07.11.2012.By.Lovi..தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது. இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது.

ஆய்வு விவரங்கள் குறித்து கிடியான் மேலும் கூறியதாவது:

மன உளைச் சலுக்கு கார்டிசால் ஹார்மோன் சுரப்பு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகரித்தால், அட்ரீனல் சுரப்பியில் கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இன்சுலினின் செயலுக்கு எதிராக செயல்படும் குணம் கொண்டது கார்டிசால். இதன் அளவு அதிகமானால், குளுக்கனோஜெனிசிஸ் வினை காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து கார்டிசால் அதிகம் சுரந்தால் `பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

தலைமுடி சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு செ.மீ. நீளம் வளர்கிறது. 1 செ.மீ. நீள தலைமுடியை ஆய்வு செய்து, அதில் கார்டிசால் அளவை கணக்கிட்டால் ஒரு மாத காலத்தில் மனஉளைச்சல் பற்றி தெரிந்துகொள்ளலாம். 6 மாத காலத்துக்கு மனஉளைச்சல் நிலவரத்தை தெரிந்துகொள்ள 6 செ.மீ. நீள தலைமுடி போதும். மேலும், கார்டிசால் அளவைக் கொண்டு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு

சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்!


  06 November 2012 By.Rajah.இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர்.ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை.
இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
வயிற்று வலி: காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
இரைப்பை புண்: உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும்.
மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.
இரைப்பை அழற்சி: சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும்.
அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.
ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

தயிரும் மருத்துவ பயன்களும்!?

05.11.2012.By.Lovi.தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.

மிதமான லாக்டோஸ்- சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.

லேக்டோசிலுள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப் பெறுவதால், லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது.

எல்.ஆசிடோபிலஸ் கொண்ட தயிரை உட்கொள்வதன் மூலம் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்ஜை நோயைக் குணப்படுத்தமுடியும் என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது. ஏனென்றால், அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் காரணமாகும்.

இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிகிறது.

பரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் உட்கொண்டவர்களின் எடை 22% அளவுக்கு மேலும் குறைந்ததாகவும், முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை!

04.11.By.Loviபண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா? சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல... பலனும் பல!

நகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.

தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள்.
வேப்பம்பூ பூக்கும் சீசனில் சேகரித்து, காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்வார்கள்.

மாதமொருமுறை வேப்பம்பூ பொரியல் செய்வார்கள். வயிற்றை வதைக்கும் பூச்சிகளை கொன்றொழித்து விடுமாம்! கடுங்காய்ச்சல் கண்டவர்களுக்கு என்றே புதருக்கு புதர் முளைத்துக் கிடக்கும் தூதுவளை. கொக்கி முள்ளால் நிறைந்திருக்கும் இதன் இலையை துவையல் அரைப்பார்கள். பொரியலும் செய்வார்கள். காயை உடைத்துப் போட்டு ரசம் வைப்பார்கள். புதர்தோறும் நெளிந்து கிடக்கும் பிரண்டையின் இளந்தண்டை ஒடித்தால் துவையல் அரைக்கலாம்.

வயிற்றுக் கோளாறு முதல் ஆண்மைக் கோளாறு வரை எல்லாவற்றுக்கும் மருந்து. நீரிழிவுகாரர்களுக்காக, வெற்றிலை கணக்கில் மரங்கள்தோறும் படர்ந்து கிடக்கும் கசப்புக்குறிஞ்சா. மாதம் ஒருமுறை இதை பொரித்துச் சாப்பிட்டால் பலன் உண்டு. குளக்கரைகளில் இதழ் விட்டு முளைத்துக் கிடக்கும் வல்லாரை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

கதிர் அறுத்த வயல்களில் முளைத்துக் கிடக்கும் சுக்கங்காய் (மிதுக்கங்காய்) பறித்து இரண்டாக வகுந்து மோரில் ஊற வைத்து காய வைக்க வேண்டும். அதைப் பொரித்தெடுத்தால் கசப்பும் துவர்ப்பும் மிக்க மிதுக்கு வற்றல். சுடுகஞ்சிக்கு அற்புத துணை! பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து... கோதுமை ஜூஸ்!

ஆரோக்கியமான இதயத்திற்கு?

04.11.2012.By.Lovi.உண்ணும் உணவுகளில் கலோரிகள் அதிகமான உணவுகளை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதோடு இதயமும் விரைவில் பாதிக்கப்படும்.
ஆகவே அத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து, உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்களான மஞ்சள் தூள், இலவங்கம், மிளகு, கிராம்பு மற்றும் பல பொருட்களை உணவில் அதிகம் சேர்த்தால், உடலில் உப்புச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.
ஆலிவ் ஆயில்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் எண்ணெயில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. அதிலும் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. இதனை சமைப்பதற்கு பயன்படுத்தினால், உடல் எடை குறைவதோடு, இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஓட்ஸ்
காலை உணவில் ஆரோக்கியமாகக் கருதப்படும் உணவு தான் ஓட்ஸ். இது மிகவும் சுவையாக இருப்பதற்கு, க்ரீம்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும் ஸ்வீட்னரை பயன்படுத்துகிறோம்.
ஆகவே அவ்வாறு சாப்பிடுவதற்கு பதிலாக தயிர் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் என்றாலே உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் கரைக்கும் பழங்கள் என்பது நன்கு தெரியும். இத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆகவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்கள் நன்கு சுவையோடு, அனைத்து வகையான உணவுப் பொருட்களுக்கும் ஒரு அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது. இந்த பெர்ரிப் பழங்களை சாப்பிட்டால், உடலில் உள்ள கலோரிகள் கரைந்துவிடும்.
பூண்டு
இதய நோயாளிகளுக்கு பூண்டு மிகவும் ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அதை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே இந்த உணவுப் பொருளை உணவில் சேர்ப்பது நல்லது.
மிளகாய்
மிளகாய் மிகவும் காரமான உணவுப் பொருள். இது உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த மிளகாய் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும்.
மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, உடலில் உள்ள ஸ்டாமினாவை ஊக்குவிக்கும் ஒரு பொருளாகவும் உள்ளது.
நட்ஸ்
நட்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. அனைவரும் இதுவரை நட்ஸில் கலோரிகள் அதிகமாக இருக்கும் என்று தான் நினைக்கின்றோம்.
ஆனால் நட்ஸில் பாதாம் மற்றும் ஆப்ரிக்காட்டில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அளவுக்கு அதிகமாகவும் உள்ளது

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு!


 03 November 2012 .By.Lovi.
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
மிளகு  சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.  மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது.  ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.
நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல்  போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. 
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி  கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு  பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்!


03 November 2012 .By.Lovi.
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. 
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும்.  தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால்  அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும்???

 

   Friday02November2012.By.Lovi.தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு     வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.

பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.

உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.

முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.

கணுக்கால் வலி வருமுன் காக்க:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
சுக்கு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்

எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை 5
வசம்பு 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்

மூலிகை தன்மைக் கொண்ட குங்கும பூ!


Friday 02 November 2012.By.Lovi.கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.

* ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* இதேபோல், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.

* அதோடு, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.

* குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

* குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

* நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

குங்கும பூ வின் பயனை கண்டிப்பாக நீங்கள் பெற மறவாதீர்கள்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்``

02.11.2012.By.Loviசித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவ திருவிநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அருள்மிஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை  இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க  என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார்தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.கு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம் - 628 802, தூத்துக்குடி மாவட்டம்.காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.விழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது.
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.
கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.
யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.அதிசயத்தின் அடிப்படையில்: விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்

என் பிறவிப் பயனை அடைந்தேன்: துறவியான இளம்பெண் நெகிழ்ச்சி!

02.211.2012.By.Loviதுறவியாகும் விழா, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை பகுதி அண்ணாசாலையை சேர்ந்தவர் அசோக்குமார் போரா. இவரது மகள் ஷீத்தல், 26. சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஷீத்தல், பள்ளி படிப்பை நிறைவு செய்த போது துறவியாக முடிவெடுத்தார். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கியவர், பெற்றோரின் சம்மதத்தை போராடி பெற்றார். இதையடுத்து, அவர் ராஜஸ்தான் சென்று, வரும் 5ம் தேதி முதல், துறவற வாழ்க்கை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, நேற்று காலை காமராஜர் அரங்கத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. காலையில், அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவருக்கு, உறவினர்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஜைன மத சடங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துறவற வாழ்க்கை குறித்த நெறிமுறைகள், வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டு ஜைன மத போதனைகளும் விளக்கப்பட்டன.

இது குறித்து ஷீத்தல் கூறியதாவது: இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. சிறு வயது முதலே, பிறருக்கு உதவும் வகையில் என் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. என்னுடைய நீண்ட கால தேடல் மூலம் துறவறமே அதற்கு மிக சிறந்த வழி என்று கண்டு கொண்டேன். இந்த பயணம் மிக கடுமையானது என்று எனக்கு தெரியும். இப்போது தான் என் பிறவிப் பயனை அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில், அவரது பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஜைன துறவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஷீத்தலை வாழ்த்தினர். இன்று காலை, அவர், ராஜஸ்தான் புறப்பட்டுச்

அழகு பொருளாகவும் பயன்படும் எலுமிச்சை

வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012, By.Lovi.
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.
எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால் சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
தலையில் பொடுகு இருந்தால் தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும்.
நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும்

Samsung அறிமுகப்படு​த்தும் Galaxy Premier கைப்பேசிகள்

 வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012.By.Rajah.
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Samsung ஆனது தனது உருவாக்கத்தில் வெளியாகி பிரபலமடைந்து Galaxy S III கைப்பேசியின் உருவத்தை ஒத்த வடிவமைப்பினைக் கொண்ட Galaxy Premier கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கைப்பேசிகள் 4.65 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixels Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் TI OMAP 4470 வகையைச் சார்ந்த 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor-னையும் கொண்டுள்ளது.
மேலும் இவை Android 4.1 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB RAM காணப்படுகின்றது.
இவற்றுடன் 8 Mexapixels உடைய பிரதான கமெராவும், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்காக 1.9 Mexapixels உடைய துணைக்கமெரா ஒன்றும் பொருத்துப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 680 அமெரிக்க டொலர்களாகும்.

போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக முறையிடுவத​ற்கு

 வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012,By.Lovi.
சமூகவலைத்தளங்களின் மத்தியில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளத்தினால் நன்மைகள் காணப்பட்ட போதிலும் அவற்றினை மீறிய அளவிற்கு தீங்குகளும் காணப்படுகின்றன. இவற்றில் போலியான கணக்குகளை ஆரம்பித்துக் கொண்டு மற்றவர்களை தொந்தரவு செய்பவர்களும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
எனவே இவ்வாறானவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், பேஸ்புக் தளத்தின் பயனை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வதற்காகவும் போலியான கணக்கினைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பேஸ்புக் தளத்திற்கு தெரிவிக்கும் போது குறித்த கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு உங்கள் கணக்கினைப் பயன்படுத்தி பேஸ்புக் தளத்தினுள் உள்நுளைந்து போலியான கணக்கு என நீங்கள் கருதுபவரின் Timeline-ற்கு செல்லவும். தொடர்ந்து Message Tab-ற்கு அண்மையில் காணப்படும் Settings பொத்தானை அழுத்தி Report/Block என்பதை தெரிவுசெய்யவும்.
அப்போது தோன்றும் Pop-up விண்டோவில் This timeline pretending someone or is fake என்பதை தெரிவு செய்து தொடர்ந்து அதன் கீழ்ப்பகுதியில் உள்ள drop down மெனுவில் போலியான கணக்கின் வகையை தேர்ந்தெடுத்து Continue பொத்தானை அழுத்தவும்.
அதன் பின்னர் I confirm that this report is correct என்பதை தெரிவு செய்து Okay பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கவும்.
உங்களிடம் பேஸ்புக் கணக்கு ஒன்று இல்லை எனின் இந்த இணைப்பில் கிளிக் செய்து (http://www.facebook.com/help/contact/?id=169486816475808) தோன்றும் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலும் போலியான கணக்கு ஒன்றின்மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.

Powered by Blogger.