| வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012, By.Lovi. |
| சிட்ரஸ்
பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த
எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக
பயன்படுகிறது.
எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்
நிறைந்துள்ளன. எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால் சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும். தலையில் பொடுகு இருந்தால் தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும். நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும் |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen