வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012.By.Rajah. |
முன்னணி கைப்பேசி
உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Samsung ஆனது தனது உருவாக்கத்தில் வெளியாகி
பிரபலமடைந்து Galaxy S III கைப்பேசியின் உருவத்தை ஒத்த வடிவமைப்பினைக் கொண்ட Galaxy
Premier கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இக்கைப்பேசிகள் 4.65 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixels Resolution உடைய
Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் TI OMAP 4470 வகையைச் சார்ந்த 1.5GHz
வேகத்தில் செயற்படக்கூடிய Processor-னையும் கொண்டுள்ளது. மேலும் இவை Android 4.1 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB RAM காணப்படுகின்றது. இவற்றுடன் 8 Mexapixels உடைய பிரதான கமெராவும், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்காக 1.9 Mexapixels உடைய துணைக்கமெரா ஒன்றும் பொருத்துப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 680 அமெரிக்க டொலர்களாகும். |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen