போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக முறையிடுவத​ற்கு

 வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012,By.Lovi.
சமூகவலைத்தளங்களின் மத்தியில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளத்தினால் நன்மைகள் காணப்பட்ட போதிலும் அவற்றினை மீறிய அளவிற்கு தீங்குகளும் காணப்படுகின்றன. இவற்றில் போலியான கணக்குகளை ஆரம்பித்துக் கொண்டு மற்றவர்களை தொந்தரவு செய்பவர்களும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
எனவே இவ்வாறானவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், பேஸ்புக் தளத்தின் பயனை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வதற்காகவும் போலியான கணக்கினைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பேஸ்புக் தளத்திற்கு தெரிவிக்கும் போது குறித்த கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு உங்கள் கணக்கினைப் பயன்படுத்தி பேஸ்புக் தளத்தினுள் உள்நுளைந்து போலியான கணக்கு என நீங்கள் கருதுபவரின் Timeline-ற்கு செல்லவும். தொடர்ந்து Message Tab-ற்கு அண்மையில் காணப்படும் Settings பொத்தானை அழுத்தி Report/Block என்பதை தெரிவுசெய்யவும்.
அப்போது தோன்றும் Pop-up விண்டோவில் This timeline pretending someone or is fake என்பதை தெரிவு செய்து தொடர்ந்து அதன் கீழ்ப்பகுதியில் உள்ள drop down மெனுவில் போலியான கணக்கின் வகையை தேர்ந்தெடுத்து Continue பொத்தானை அழுத்தவும்.
அதன் பின்னர் I confirm that this report is correct என்பதை தெரிவு செய்து Okay பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கவும்.
உங்களிடம் பேஸ்புக் கணக்கு ஒன்று இல்லை எனின் இந்த இணைப்பில் கிளிக் செய்து (http://www.facebook.com/help/contact/?id=169486816475808) தோன்றும் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலும் போலியான கணக்கு ஒன்றின்மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.