06 November 2012 By.Rajah.இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர்.ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை.
இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
வயிற்று வலி: காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
இரைப்பை புண்: உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும்.
மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.
இரைப்பை அழற்சி: சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும்.
அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.
ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen