பெண்கள் இதய நோயை தக்காளி கட்டுப்படுத்தும் !

      
12.11.2012.By.Lovi.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.
அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.