ஆரோக்கியமான இதயத்திற்கு?

04.11.2012.By.Lovi.உண்ணும் உணவுகளில் கலோரிகள் அதிகமான உணவுகளை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதோடு இதயமும் விரைவில் பாதிக்கப்படும்.
ஆகவே அத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து, உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்களான மஞ்சள் தூள், இலவங்கம், மிளகு, கிராம்பு மற்றும் பல பொருட்களை உணவில் அதிகம் சேர்த்தால், உடலில் உப்புச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.
ஆலிவ் ஆயில்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் எண்ணெயில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. அதிலும் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. இதனை சமைப்பதற்கு பயன்படுத்தினால், உடல் எடை குறைவதோடு, இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஓட்ஸ்
காலை உணவில் ஆரோக்கியமாகக் கருதப்படும் உணவு தான் ஓட்ஸ். இது மிகவும் சுவையாக இருப்பதற்கு, க்ரீம்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும் ஸ்வீட்னரை பயன்படுத்துகிறோம்.
ஆகவே அவ்வாறு சாப்பிடுவதற்கு பதிலாக தயிர் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் என்றாலே உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் கரைக்கும் பழங்கள் என்பது நன்கு தெரியும். இத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆகவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்கள் நன்கு சுவையோடு, அனைத்து வகையான உணவுப் பொருட்களுக்கும் ஒரு அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது. இந்த பெர்ரிப் பழங்களை சாப்பிட்டால், உடலில் உள்ள கலோரிகள் கரைந்துவிடும்.
பூண்டு
இதய நோயாளிகளுக்கு பூண்டு மிகவும் ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அதை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே இந்த உணவுப் பொருளை உணவில் சேர்ப்பது நல்லது.
மிளகாய்
மிளகாய் மிகவும் காரமான உணவுப் பொருள். இது உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த மிளகாய் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும்.
மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, உடலில் உள்ள ஸ்டாமினாவை ஊக்குவிக்கும் ஒரு பொருளாகவும் உள்ளது.
நட்ஸ்
நட்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. அனைவரும் இதுவரை நட்ஸில் கலோரிகள் அதிகமாக இருக்கும் என்று தான் நினைக்கின்றோம்.
ஆனால் நட்ஸில் பாதாம் மற்றும் ஆப்ரிக்காட்டில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அளவுக்கு அதிகமாகவும் உள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.