குட்டிக் கதைகள் அறியாண்மைகள் "ஒரு செல்வந்தன் தன் பிதாவுக்கு ஒரு ஓட்டிலே கஞ்சி வார்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தானாம். அவன் பிள்ளை ஒருவன் நீண்ட நாளாக தந்தையின் செயலை பார்த்த படியே இருந்தான் ஆனால் அவன் இதயத்தில் வேதனை பொங்கி வழிந்தது. ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஓளித்து வைத்து விட்டான். அந்த செல்வந்தத் தந்தை மாலை உணவைத் தன் தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத் தேடிவிட்டு தந்தையாரிடம் அந்த ஓடு எங்கே எனக் கேட்டார். அவரோ நானறியேன் பராபரமே என்றாராம். உடனே தனது மகனிடம் சென்று தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக்
காணவில்லை. நீ கண்டாயா என வினவி அதட்டிக் கேட்டாராம். அவனும் தெரியாது என சொல்லவும் கோபத்துடன் தந்தையாரின் பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையாரை அடித்து விரட்டி எங்கே உனது ஓடு என்று கோபமாக சண்டையிட்டாராம். இதைக்கவனித்தக் கொண்டிருந்த மகன் பெருவேதனையோடு ஓடிச் சென்று. தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி அந்த ஓடு என்னிடம் தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் பெரியவனானபின் உங்களுக்கும் முதுமை வரும் தானே. அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாறவேண்டி வரும். அதற்கு அப்போது இப்படி ஓடு எடுப்பது கஸ்டம். அதற்காக நான் அதை எடுத்து உங்களுக்காக பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றானாம். அப்போது தான் அந்தச் செல்வந்தனுக்கு பிரமை அழிந்து தன் செயலைப் பற்றித் தெளிவு பிறந்ததாம். வெட்கமும், வேதனையும் பிறந்து. அந்தக் கணம் முதல் தன் தந்தையை கௌரவமாக பாதுகாக்க தொடங்கினானாம்.
இடையன்
ஒருபாடகன் தனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடி தலையை அசைத்தக் கொண்டு சங்கீதம் பாடிய படி இருந்தான். அந்த தெரு வீதியால் சென்ற மக்கள் எல்லாம் அவனை சுற்றி நின்றபடி பாட்டை ரசித்துக் கொண்டு நின்றார்களாம். அப்போது அந்த வழியாக ஒரு ஆடுமேக்கும் இடையனும் வந்து இந்தக் கூட்டத்தை பார்த்து தானும் சற்று தாமதித்து நின்றபடி அவனின் பாட்டை கேட்டுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் சென்றதும் ஓவென்று அழுதானாம். நின்றவர்கள் அனைவரும் இவன் பாட்டின் இரசனையின் மிகுதியால் மகிழ்ச்சியில் அழுகிறானாக்கும் என நம்பி அவனுக்கு தேறுதல்
சொன்னார்களாம். உடனே அவன் விழிப்படைந்து நான் அழுதது இவனுக்கு கண்டிருக்கும் நோயைப்பற்றித்தான். எனது மந்தையில் ஒரு ஆடு இப்படித்தான் தலையை ஆட்டியபடி கத்திவிட்டு எந்த மருந்து செய்தும் நோய் மாறாது சிறு நேரம் செல்ல இறந்து விட்டது. அதனால் இவரின் நோய்க்கு கையில் இரும்பு காச்சிச் சுட்டால் தலை ஆட்டம் நின்றுவிடும் என்றானாம். கூடி நின்றவர்கள் அவனின் அறியாண்மையை நினைத்து
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen