Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி

 30. யூலை 2012,
இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும்.
எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.