ரயிலின் கூரை மீது பயணத்தை தவிர்க்க இந்தோனேசியா அதிகாரிகள் புது திட்டம்

 29 யூலை 2012,
இந்தோனேசியாவில் பயணிகள் ரயில் கூரை மீது பயணிப்பதை தவிர்ப்பதற்காக, மின்சார ஒயரின் உயரத்தை தாழ்த்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ரயில் கூரை மீது பயணிகள் சர்வசாதாரணமாக பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இது ஆபத்தானது என பலமுறை பல்வேறு பிரசாரங்களின் வாயிலாக கூறியும், அச்சமில்லாத பயணிகள் தொடர்ந்து கூரை மீது பயணித்து வருகின்றனர்.
கூரை மீது எண்ணெய் தடவி வைத்தும், இவர்கள் அதன் மீதும் சாகச பயணம் மேற்கொண்டு அதிகாரிகளின் முயற்சியை வீணடித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக ரயில் பாதையில் மின்சார கேபிள்களின் உயரத்தை தாழ்த்தி அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
ரயில் கூரையை ஒட்டி மின்சார கேபிளை அமைப்பதன் மூலம் மின்சார தாக்குதலுக்கு பயந்து, பயணிகள் கூரை மீது ஏறமாட்டார்கள் என இந்தோனேசிய ரயில்வே நிர்வாகம் நம்புகிறது.
ஆனால் பயணிகளோ மின்சார கேபிளின் உயரத்தை குறைப்பதற்கு பதில், ரயில் டிக்கெட்டின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.