பிரான்சில் பயங்கர புயல் காற்று: பாதுகாப்புடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை

 29 யூலை 2012.
பிரான்சின் வடக்கு பகுதியில் பயங்கர புயல் காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பிரான்சின் வடக்கு பகுதியில் கடும் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு பகுதியில் புயல் காற்று வீசியது. இருப்பினும் புயல் காற்றின் வேகம் வலுவிழந்து இருந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை அறிவிப்பாளர்கள் கூறுகையில், காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றரும், மழையின் அளவு மணிக்கு 40 கிலோ மீற்றர் என்ற அளவிலும் இருந்தது.
இன்று இரவு வரை புயல் வீசாது என்ற போதிலும், புயலின் தாக்கம் இருக்ககூடும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் மலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.