ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்

ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்29.07.2012.

ஒலிம்பிக் போட்டியைக் காண உலகெங்கும் உள்ள மக்கள் விமானம், கப்பல் என்று பல வழிகளிலும் சுலபமாக லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், சீன விவசாயி செங் குவாங்மிங், 2 ஆண்டுகால ரிக்ஷா பயணத்தின் மூலம், லண்டனை வந்தடைந்துள்ளார்.
2010ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், 16 நாடுகளை கடந்து 2 ஆண்டுகள் கடந்து தற்போது லண்டனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 57 வயதான நான், இதுவரைக்கும் சீனாவைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை.
தடகளப் போட்டிகளின் பெரும் ஆதரவாளரான நான், ஒலிம்பிக் போட்டியின் பெரு‌மையை உலகெங்கும் பரப்பும் விகிதமாக இப்பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.