| செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
மிக்கே டெல்பெர்க், மைக்கேல் கிராய்ஸ் மற்றும் அனில் செலிக், ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அரசிடம் கொடுப்பதற்காக ஒரு முறையீட்டைத் தயார் செய்து வருகின்றார். இதுவரை முந்நூறு பேரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளனர். யூதர்களும், முஸ்லீம்களும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சுன்னத் சமயச் சடங்கை ஜேர்மானிய மருத்துவமனைகள் செய்ய மறுத்தால், பின்பு இவர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று இந்த அறுவையை மேற்கொள்ள வேண்டிவரும். மேலும் இந்தத் தீர்ப்பு தங்களின் அடிப்படை சமய உரிமைகளை மறுப்பதாகவும் தெரிவித்தனர். இத்தீர்ப்பு குறித்த தகவல், அண்டை நாடுகளிலும் பரவியதால் இப்பிரச்னையில் ஜேர்மனி மற்றும் சுவிஸ் வாழ் இளைஞருடனான தாமும் இணைந்து கொள்வதாகத் ஆஸ்திரியாவின் யூத சமூகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிததது. ஜேர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் இச்சமயச்சடங்கிற்கு சட்ட அந்தஸ்து வழங்குமாறு வற்புறுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த 1 KG அமைப்பின் தலைவரான ஆஸ்கார் டியூஷ் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார். ஜேர்மனியிலும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் சமயச்சடங்கைப் பாதுகாக்குமாறு அரசுக்கு தெரிவித்துள்ளனர் |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen