ஜேர்மனியிடமிருந்து கத்தாருக்கு பீரங்கி ஏற்றுமதி: மெர்க்கெல் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
ஜேர்மனியும், கத்தாரும் பீரங்கி வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு ஜேர்மன் பிரதமர் ஆதரவாக இருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்றின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த அறிக்கை, கத்தார் லெப்பர்ட் -2 என்ற பீரங்கிகளை கிராஸ் மாஃபி வெக்மான நிறுவனத்திடமிருந்து வாங்க ஆவலாக இருப்பதாக தெரிவிக்கிறது.
கடந்த மாதம், சவுதி அரேபியா தனக்கு 600 முதல் 800 வரையிலான எண்ணிக்கையில் இதே லெப்பர்ட்– 2 பீரங்கிகள் வேண்டும் என்று தன் விருப்பதைத் தெரிவித்துள்ளது. இந்த பீரங்கிகளின் விலை மதிப்பு 10 பில்லியன் யூரோவாகும்.
இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல தன் சொந்தக்கட்சியினர் கூட பிரதமர் மெர்கெல்லிடம், மத்திய கிழக்கு நாடுகளில் போரும், பூசலுமாக இருப்பதால், ஆயுத ஏற்றுமதி கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் அரசு நேட்டோவிடம் ஆயுத விற்பனை நடக்கக்கூடிய நாடுகளின் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தியது.
ஆனால் கடந்த மே மாதத்தில் சிகாகோவில் நடந்த நேட்டோ மாநாட்டில் இதற்காக கொண்டு வந்த தீர்மானம் உறுப்பினர் ஆதரவின்மையால் தோற்றுவிட்டது.
எனினும் பிரதமரின் அலுவலகமும், பொருளாதார துறையும் கத்தாருக்கு 2 பில்லியன் யூரோ பீரங்கி விற்பனைக்கு ஆதரவளிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.