மின்னஞ்சல் மூலம் பெரிய அளவுடைய கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு

29 யூலை 2012,
பெரிய அளவுடைய கோப்புக்களை தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் தரப்படும் இடவசதி போதிய அளவு இல்லாமையினால் இவ்வாறான கோப்புக்களை பரிமாற்றம் செய்வது கடினமாகும். எனினும் இதனை நிவர்த்தி செய்து கோப்புக்களை பரிமாறுவதற்கு Zeta Uploader எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், அதனை இயக்கி Files to upload எனும் பகுதியில் காணப்படும் Add files/Add folder எனும் அம்சத்தின் ஊடாக பரிமாற்றம் செய்ய வேண்டிய கோப்புக்களை இணைக்க வேண்டும்.
பின்னர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களது மின்னஞ்சல் முகவரியை உட்செலுத்தி, செய்தி ஒன்றினையும் டைப் செய்த பின்னர் Update now என்பதனை கிளிக் செய்யவும். இதன் பின்னர் குறிப்பிட் கோப்பு தரவேற்றப்பட்டு அனுப்பப்படும்.
அனுப்பிய பின் மின்னஞ்சலுக்கு செய்திகளுடன் ஒரு இணைப்பு அனுப்பப்படும், அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.