சீன மொழியில் மொழிபெயர்க்கப்படும் காந்தியின் புத்தகம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
காந்தியடிகளின் “தன்னிகரற்ற தலைமை பண்பு” என்ற புத்தகம், சீன மொழியில் வெளியிடப்பட உள்ளது. முன்னாள் இந்திய தூதரான பாஸ்கல் ஆலன் நசரத், "மகாத்மா காந்தியின் தலைமை பண்புகள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் கடந்த 2006ம் ஆண்டில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த புத்தகம், சீன மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தை, சீன பல்கலை கழக வரலாறு பேராசிரியர் ஷாங் குவான்யூ மொழி பெயர்த்து வருகிறார்.
அடுத்த ஆண்டு இந்த புத்தகம் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீன வர்த்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பீஜிங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
“பயங்கரவாதம் வன்முறை தலைவிரித்தாடும் தற்போதைய காலகட்டத்தில் காந்தியின் இந்த புத்தகம் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்” என ஜெய்சங்கர் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.