மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் முறைகேடு

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைத் 55% பேர் தகுதியில்லாத நிலையில் பெற்றுள்ளனர். இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதால் உரிய பலன் பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஏமாற்றுக்காரர்களாகவே இந்த உலகம் பார்க்கின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் அடுத்த மாதம் ஆரம்பிக்கும் நிலையில் “ஸ்கோப்” என்ற தொண்டுநிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
இந்த “ஸ்கோப்” நிறுவனம் சுமார் 500 மாற்றுத்திறனாளிகளிடமும் அவர்களின் பெற்றோர் மற்றும் கவனிப்பாளரிடமும் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆய்வை நிகழ்த்தியது.
இந்த ஆய்வில் 46% பேர் தங்களைப் பற்றிய மோசமான அபிப்ராயம்தான் சமூகத்தில் நிலவுவதாகத் தெரிவித்தனர். 40% பேர் தங்களின் பெயர் கெட்டுப்போய்விடவில்லை என்றனர். 16% பேர் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருப்பதாக கூறினர்.
64% தங்களை வெறுப்போடும், கசப்போடும் பார்ப்பதாகக் கூறினர். உடற்குறையைச் சுட்டி பெயர் வைத்து அழைப்பதாகவும் தெரிவித்தனர். 73% பேர் தாங்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவதாகப் பொதுமக்களிடம் ஓர் கருத்து இருக்கிறது என்றனர்.
87% பேர் தங்களுக்குத் தகுதியில்லாத நலத்திட்ட உதவிகளைப் பெற்று அனுபவிப்பதாகக் குற்றம் சாட்டினர். 84% பேர் ஊடகங்கள் தங்களை போலிப்பயனாளிகளாக மக்கள் மத்தியில் காட்டுவதாகக் கூறி வருந்தினர்.
“ஸ்கோப்” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரிச்சர்டு ஹாக்கஸ், அரசு தொடர்ந்து போலிப்பயனாளிகளைக் களையெடுத்த போதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றார்.
பணி மற்றும் ஓய்வூதியத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், “அரசு முறைப்படி இந்த நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த சட்டங்களும் இருக்கின்றன. ஊடகங்கள் உருவாக்கிய எதிர்மறையான கருத்தாக்கங்களைப் போக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றுத் திறனாளிகள் அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமும் பயன்பெறலாம். இதற்கான தகுதியைக் கணிப்பது குறித்த தெளிவான விளக்கத்தை பிபிசி அறிவித்த பின்பு இந்த ஆய்வு விபரம் வெளியிடப்பட்டது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.