இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட கப்பல் 70 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை,  31 யூலை 2012, 11:41.21 மு.ப GMT ]
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட, ஜேர்மனியைச் சேர்ந்த U 550 என்ற நீர்மூழ்கிக் கப்பல் எழுபது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியு ஜெர்ஸியின் வழக்கறிஞர் ஜோ மஸ்ரானியின் தலைமையிலான குழுவொன்று இந்த கப்பலை கண்டுபிடித்தது.
ஏழு பேர் கொண்ட குழு நாண்டுகெட்டுக்குத் தெற்கே எழுபது மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த கப்பலை கண்டுபிடித்தனர்.
கடந்த 1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி U 550 என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், SSPan Pennsylvania என்ற எரிபொருள் சரக்குக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது.
இவ்வாறு முறியடிக்கப்பட்ட கப்பல் எழுபதாண்டுகள் கழித்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜோ மஸ்ராணி, மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் இந்த கடல் பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார். இதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்தார்.
இது குறித்து மஸ்ராணி கூறுகையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த கப்பலை அமெரிக்க போர்ப் படைக் கப்பலில் பணியாற்றியவர்களின் நட்பு மற்றும் சுற்றத்தை அழைத்து காட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.