தரம் குறைந்த டீசலினால் வாகனங்களுக்கு பாதிப்பு

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
வாகனங்களுக்கு தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்தியதனால் சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், தரம் குறைந்த டீசலினைப் பயன்படுத்தி வாகனங்கள் பழுதடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த டீசலின் மாதிரி மேலதிக பரிசோதனைக்காக டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்திய ஆறு புகையிரத என்ஜின்கள் சேதமடைந்துள்ளன.
புகையிரத என்ஜின்கள் பழுதடைந்திருப்பதால் போக்குவரத்து சேவைகளை நடாத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்திய 50 தனியார் பேரூந்துகள் பழுதடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் தரம் குறைந்த எரிபொருட்களை இறக்குமதி செய்த காரணத்தினால் வாகனங்கள் பழுதடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பழுதடைந்த வாகனங்களுக்கு அரசாங்கம் நட்ட ஈட்டையும் வழங்கியிருந்தது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.