கைபேசி கோபுரத்தால் புற்று நோய் வரும் அபாயம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த இராமநாத் கார்க். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில் மொபைல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருக்கிறார். தனது மனுவிற்கு வலு சேர்க்கும் காரணங்களையும் அவர் மனுவில் கூறியிருக்கிறார்.
30 வயதான தனது மகன் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும், இதற்கு தனது வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் கோபுரத்திலிருந்து வெளியான வீரியம் மிக்க கதிர்வீச்சே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.