மரக்கறி, தேங்காய் விலைகள் வீழ்ச்சி; உற்பத்தியாளர்கள் சிரமத்தில்
சாவகச்சேரிச் சந்தையில் மரக்கறி மற்றும் தேங்காய் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 100 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் தற்போது கிலோ முப்பது ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளன. குடாநாட்டு மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தம்புள்ளவிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறி வகைகளும் கிலோ 40 ரூபாவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அண்மைக் காலமாகப் பூநகரிப் பிரதேசத்தில் இருந்தும் பொதுமக்களும் படையினரும் பெருமளவு மரக்கறி வகைகளைச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உற்பத்தியாளர்கள் பெருமம் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
இதேவேளை, சந்தையில் தேங்காயின் விலையும் ஒரு மாதமாக வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. பெரிய தேங்காய் ஒன்று 18 ரூபாவாகவும் சிறிய தேங்காய் 10 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் வன்னிப் பிரதேசத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் தேங்காய்கள் வாகனங்களில் கொண்டு வரப்படுவதால் தேங்காயின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையலாம் என்று தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen