கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிப்பு உற்சவம்:

 வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீமிப்பு உற்சவம் இடம்பெற்றது. கடந்த திங்கட்கிழமை திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி ஐந்து நாள் உற்சவமாக வியாழக்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று மதியம் நெல் குத்தும் பூசையும் இரவு விநாயகர் பானைப் பூசையும் இடம்பெற்று வெள்ளிக்கிழமை காலை தீமிதிப்பு மற்றும் திருக்குளித்தியாடும் வைபத்துடன் சடங்கு உற்சவம் முடிவடைந்தது.
 
இவ்வாலயத்தில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கண்ணகிபுரம் பேத்தாழை விநாயகபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பக்த அடியார்கள் தீ மிதிப்பில் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாலய சடங்கு உற்சவங்கள் அனைத்தும் ஆலய பிரதமகுருவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. உற்சவம் முடிவுற்றதும் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.













0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.