மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வரும் மகா சிவராத்திரி வரலாறு?

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது 
அம்பாளின் வேண்டுதலின்
படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து 
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை ,அர்ச்சனை செய்தாள்.
தான் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் `சிவராத்திரி‘
என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுமாறு 
அன்னை வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் சிவராத்திரி. வில்வ மரத்தடியில் இருந்த சிவலிங்கம் மீது உறக்கம் வராமல் இருக்க பறித்துப் போட்ட வில்வ இலைகள் அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் - அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது.
எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை
பிறவி எடுத்தாலும் . அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்
பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் 
பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அன்னை பார்வதி தேவி ,
 சிவபெருமானை நோக்கிக்
கடுந்தவமியற்றி இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
அர்ஜுனன் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற நாள் ...
.கண்ணப்பர் தன் கண்களை சிவபெருமானுக்கு அப்பி
கண்ணப்ப நாயனாராகி 
திருக்காளத்தி என்னும் 
புண்ணிய திருதலத்தில் முத்தி பெற்ற திருநாள் .
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை
பூமிக்கு வரவழைத்த நாள் சிவராத்திரி ..
தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக காலதேவனை 
தண்டித்து என்றும் பதினாறாக வரம்
 அளித்த நாள் ..
மனித உடலில் சக்தி இயல்பாகவே சிவராத்திரி
நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும்
வெறுமையும் இருளுமான சிவனவனை நாடி நாம்
செல்லத் தேவையில்லை,
சிவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை நமக்கு உணர்த்திவிடும்
சீர் மிகுந்த சிறப்புறு நாள் சிவராத்திரி !
மாசிமகா சிவராத்திரி தேரோட்டம், அமாவாசை யொட்டி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, தீர்த்தவாரி
நிகழ்ச்சி நடைபெறும் ..
மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் ,ஸ்ரீ கோகர்ணம் .
மந்திர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமும் சிவராத்திரிதான் ...
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.