எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,
 மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, 
கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள். பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும்.
இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
சங்கரமணம் என்ற சொல்லுக்கு பிரவேசித்தல் என்று பொருள். மகர ராசியில் சூரியன் நுழையும் நிகழ்வே மகர சங்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிப்பது தமிழ் மாதப் பிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பது தை மாதப்பிறப்பு என்றும் பொங்கல் பண்டிகை என்றும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒரு வருட காலத்தை இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து உத்திராயணம் மற்றும் தட்சியாணம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்திராயணம் ஆகும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சியாணம் ஆகும். தட்சியாணம் என்பது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலமாகும். தேவர்களுக்கு பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் முதல் தேதி அதாவது சூரியன் மகரம் ராசியில் நுழையும் நேரத்தில் பஞ்சங்கத்தின் அடிப்படையில் உள்ள கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை கொண்டு சங்கராந்தி புருஷன் என்று உருவகப்படுத்தி மகர சங்க்ராந்தியின் பலன்கள் கூறப்படுகின்றன. மன்மத வருடத்திற்க்கான சங்கராந்தி பலன்கள்…
மங்களகரமான மன்மத வருடம் மார்கழி மாதம் 29ம் தேதி (14-01-2016) அன்று வியாழக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், பரிகம் நாம யோகம், கௌலவ கரணத்தில் இரவு 01-26 மணிக்கு துலா லக்கினத்தில் சங்கராந்தி (சூரியன்) பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். பெயர் : மந்தாகினி — கல்வியில் சிறந்தவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் உருவாகலாம்.
வாகனம் : பன்றி — விவசாய பயிர்கள் சீர்கெடும் வஸ்திரம் : விசித்திரம் — அனைவரும் நலமாக இருப்பர் ஆபரணம் : சுவர்ணம் — ஆடைகளின் விலை குறையும் ஸ்நானம் : மஞ்சள் — பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகம் ஆயுதம் : கலப்பை — அனைவருக்கும் உணவு கிடைக்கும் கந்தம் (நறுமணம்) : சந்தனம் — அனைவரும் சுகமாக இருப்பர் புஷ்பம் : மகிழம்பூ — ஒரு சிலருக்கு கஷ்டங்கள் உண்டாகலாம் சத்திரம் : ரஜதம் — வெள்ளி விலை குறையும் சாமரம் : ஹேமம் — தங்கம் விலை குறையும் வாத்தியம் : ருத்திர வீணை — தீவிரவாதிகள்
கொல்லப்படுவார்கள் பாத்திரம் : சூர்ப்பம் — தானியங்கள் பற்றாகுறை போஜனம் : மா — உடல் ஆரோக்கியம் சிறக்கும் முக பலன் : லச்சை — தானிய விருத்தி ஜாதி : வைசியர் — வியாபாரிகளுக்கு லாபம் குறையும் திக்கு : மேற்கு திசை — உறவினர்களிடையே பகைமை அதிகரிக்கும் பட்சம் : சுக்ல பட்சம் — அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும் கிழமை : வியாழன் — மழை அதிகமாக பொழியும் காலம் : இரவு — கால்நடை மேய்ப்பவர்களுக்கு கஷ்டம் லக்கினம் : துலாம் — மழை அதிகமாக பொழியும் சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன.
மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது. உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது.
இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர். இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல் நல் வாழ்த்து,,,,,,
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்……
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.