குடும்பத்தில் வளர்ச்சியை தருவதால் சிலவற்றை தெய்வ விருட்சங்களாக வளர்க்கிறோம். அவ்வரிசையில் சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும்.
வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தை சேர்ந்த பஞ்சதருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம்) வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும். சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும் ஒரு வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.
இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்தது அகண்ட வில்வமாகும். இதன் காய் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவ அர்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யக்ஞத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த பழத்தால் யக்ஞம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும் யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத் தருவார்.
மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஹோமப் பொருட்களில் வில்வப் பழமும் ஒன்றாகிறது. வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது வளரும் செடியாக இருக்கும் போதே பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத் தொடங்கும். படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும். இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.
வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே அகலாத செல்வம் தரும். மகாலட்சுமி நிரந்தரமான வசிப்பாள் என்பதை மறந்து விடக்கூடாது. வீட்டில் தாராளமாக வில்வமரம் வளர்க்கலாம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen