.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர்த்திருவிழா

இலங்கையில் உள்ள தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக 
நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா ஆகும்.
பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர் ஆகியன வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலய வெளி வீதியில் மற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம்
கல்நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. 
கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.