இந்தவருடமும் வெளிநாட்டு பக்தர்களின் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பங்கள் சார்பாக நிறைகுட சுயம்பிற்கானஆடிப்பூரப்பூர பால் அபிசேகத்தில் சுயம்புவடிவான அன்னை கண்பார்த்த சித்தாடல் இடம்பெற்றது!
கடைசிப்படத்தை உற்றுநோக்கினால் இது தெள்ளத்தெளிவாகத் தெரியும் . நாம் நமக்கு கிடைத்தவாய்ப்பை சரியாகப்பயன்படுத்தி அன்னையின் அருளைப்பெறுவோமாக..! அதை சிறப்பாக செய்துதந்த
அம்மாவின் இளையகுமாரர் சக்திமிகு கோ.ப.செந்தில்குமார் (மருவூர் சின்னவர் ) அவர்களுக்கும் மற்றும் அதை செயல்முறைப்படுத்திய
ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தமிழ்நாடு
பொறுப்பாளர் சக்தி திரு . கபிலன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
பால் வார்த்த குடும்பங்களுக்கு பராசக்தியின் பேரருள் கிடைத்தது போல் அன்னை கண்திறந்து ஏற்றுள்ளாள் . எங்கேயோ பிறந்து வளர்ந்த யார்யாரோ கருவறையில் அபிடேகம் செய்யும்போது
பக்தி சிரத்தையோடு
கும்பிடும் நாம் , அம்மாவின் உதிரத்தில் பிறந்தவர்கள் திருக்குடும்பத்தில் யார் செய்தாலும் ஏற்று அருள் செய்வாள் என்பது பேருண்மை அன்றோ..! அடிகளார் அம்மா ஒன்றே நடமாடும் தெய்வம்
ஓம் சக்தி ! ஆதிபராசக்தி!தெய்வத்திடம் நம்பிக்கைவை
அடிகளாரையோ அவர் குடும்பத்தையோ ஆராட்சிசெய்யும் வேலை நமதன்று! அதையே அம்மா குருவை நம்பு, குருவே தெய்வம் ,குருவை ஆராட்சி செய்யாதே என்கிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen