இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்

இவ்விரதத்தை மணமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான
 விரதமாகும்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சகல சௌபாக்கியங்க ளையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது.
 மிகவும் பக்தி சிரத்தையோடு(ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட
 மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
இவ் வரலட்சுமி விரதம், பெரும்பாலும் எல்லா அம்பிகை ஆலயங்களிலும், இலக்குமி தேவியை பரிவார தெய்வங்களாக கொண்ட மற்றைய ஆலயங்களிலும் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அனேகமானோர் ஆலயங்களிலேயே இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அங்கே குத்துவிளக்கேற்றி
 இலக்குமியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபட்ட பின்னர் அதனை அணையாது வீட்டிற்கு எடுத்துச் சென்று சுவாமி அறையில் வைத்து வழிபடடுகின்றனர். (இலக்குமி தேவியை ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக அமைகின்றது.)
உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால்
 மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குவதோடு என்றும் பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால்
 அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். 
சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.
தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் 
உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்ட்டிக்கலாம். பெரும்பாலான இந்திய நாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர்
 அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷச பூசைகளில் 
பங்குபற்றி தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.