சிவலிங்கம் தஞ்சாவூரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறும் அதிசயம்

இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார், உலகிலே பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு 
கோயில்கள் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோயில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது.இக்கோயில் 
சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகின்ற கோயில்களில் ஒன்றுதான் நிறம் மாறும் கோயில் ஆகும்.
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. மதிவேல் சோழன், உத்தமச் சோழன் ஆகியோர் கட்டியதாக
 குறிப்புகளில் உள்ளது.ஒரு நாளைக்கு ஐந்து 
முறை நிறம் மாறுவதால் தான் இந்த கோயிலுக்கு பஞ்சவர்ண சிவலிங்க கோயில் என்று பெயர்வந்தது.
தினமும் இந்த கோயிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை, தவிர, குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக 
காட்சியளிக்கிறார்.
இங்குள்ள நிறம் மாறும் லிங்கத்தை அகத்தியமுனிவர் வடிவமைத்து வழிபட்டார் என்று குறிப்புகளில் கூறப்படுகின்றது.காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், 15.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம்மாறுகிறது. மாலை ஆறு மணி வரை மரகத பச்சை நிறத்தில்
 காட்சியளிக்கிறது.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து செயல்களை குறிக்கும் விதமாக இந்த ஐந்து நிறங்களில் லிங்கம் மாறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.கோயிலுக்கு வெளியே 
அமைந்துள்ள தெப்பக்குளம் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த குளத்தில் வாராவாரம் குளித்து வந்தால் குழந்தை பேறு அடைவர் என்பது
 மக்களின் நம்பிக்கை.
இது அறிவியலின்படி, சூரிய ஒளியை அந்த சிவலிங்கம் பிரதி பலிக்கிறது. அதனால் சூரிய ஒளிக்கு ஏற்ப அந்த சிலை நிறமாறுகிறது 
என்று கூறுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.