உங்கள் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும். உயர்வான நிலையை அடைந்து, உயர்வான வாழ்க்கை வாழ
வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவது உண்டு. இவை எல்லாம் கிடைப்பதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பது
அனைவருக்கும் தெரியும்.
ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் பெயர், புகழ், பணம், பதவி, செல்வம் கிடைத்து விடுமா? என்றால் கிடையாது என்று தான்
சொல்ல வேண்டும். அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அனைவருக்கும் பணம், பெயர், புகழ் கிடைப்பது கிடையாது. பணம், பெயர்,
புகழ் ஆகியவை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அனுகிரக வேண்டும்.
அப்படி லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக இருக்க வேண்டும். சுக்கிரனின் நிலை நன்றாக, பலத்துடன் இருந்தால் பணம் சேரும், சேமிப்பு உயரும், அனைத்தும் தேடி வரும், பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.
அதுவே சுக்கிரனின் நிலை சரியில்லை, அவர் பலம் இழந்த காணப்படுகிறார் என்றால் அதை சரி செய்ய சில எளிமையான, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஏலக்காய் வாங்கி வந்து, ஒரு நூலில் மஞ்சள் தடவி, அதற்கு பிறகு 27, 51, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்து, தெய்வ மந்திரங்களை அல்லது நாமங்களை சொல்லி வணங்கிய படியே மாலையாக
கோர்க்க வேண்டும்.
இதை அப்படியே வைத்திருந்து, அடுத்த நாள் காலை, அருகில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாத்தலாம். அப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மர் படம் இருந்தால் அதில் சாத்தி வழிபடலாம்.
இந்த ஏலக்காய் மாலையை அடுத்த நாள் எடுத்து அதிலுள்ள ஏலக்காயை பிரசாதமாக சமையலில் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த
ஏலக்காய் மாலையை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
உங்களின் செல்வ நிலை செல்வாக்கு உயரும். தினமும் ஒரு ஏலக்காய் வீதம் எடுத்து, வெற்றிலை, பச்சை கற்பூரம், ஒரு நாணயம் வைத்து, அதை சுவாமி படத்திற்கு முன் வைத்து விட்டு, பச்சை கற்பூரம் கரைந்த பிறகு அந்த வெற்றிலை, ஏலக்காயை சேர்த்து சாப்பிடலாம்.
இதை தினமும் செய்து வந்தால் நரசிம்மரின் அருள் முழவதுமாக கிடைக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம்
ஏற்படும். ஏதாவது
முக்கியமான காரியமாக வெளியில் செல்வதற்கு முன் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று விட்டு போய், அந்த காரியத்திற்காக பேசினால் அது வெற்றி அடையும்.என்பதாகும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen