மெய்யான மெய்யை உணர்தல் """


 
   பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு,மெய்பொருள் இல்லாதவற்றை மெய்பொருள் என்று எண்ணி மயங்கினால் இந்த பிறவி மாயையிலிருந்து விடுதலையே இல்லை” என்று சற்று சுழற்சியாக விளக்கும் குறள் இது.

உலகில் உள்ள மதங்கள் எல்லாமே பரம்பொருளை விளக்கும் முயற்சிகளே.  “ஏன் வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு இலக்கையும், “எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலையும் தருவன.  துறவறம் மேற்கொள்வது முதல் கேள்விக்கு பதிலான மெய்பொருளை உணர்வதற்க்குத்தான்.  அந்த மெய்பொருளை அடையாளம் காட்டும் அதிகாரம் இது. 

இந்து மத கோட்பாடுகளின்படி இறையை உணர்தலே வாழ்கையின் இலக்கு.  அந்த முயற்சியில் தவறான முடிவை நோக்கி பிரயாணித்தால்  வாழ்கையே வீணாகிவிடும்.  மேலும் இந்த பிறவியை வீணடித்தால் இந்த பிறவியில் செய்த பாவத்தால் அடுத்த பிறவியில் பின்னடைவு ஏற்படும்.  எனவே, சரியான இலக்கை நோக்கி செல்லவது மிகவும் முக்கியமானது. 

இந்த தத்துவத்தில் எந்த குறையும் இல்லை.  ஆனால், உண்மையான மெய்பொருளை அடையாளம் காண்பதெப்படி என்று இந்தக் குறளிலோ அதிகாரதிலோ விளக்கப் படவில்லை.  உணர்ந்தால் தான் தெரியும் என்றால், அது மெய்பொருள் அல்ல என்று எப்படி உணரமுடியும்?  தர்க்கரீதியாக என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை.

பி.கு: புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதால் “தினமொரு குறள்” இரண்டு வாரங்களாக தடைப் பட்டு விட்டது.  அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.  தினப்படி செயல்பாடு ஒழுங்காகும் வரை இந்த முயற்சி சற்று சீராக வராமலிருக்கலாம்.  அதற்கு முன்கூட்டியே மன்னிக்க வேண்டுகிறேன்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.