| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Lovi. |
| இணைய
பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வரும் Skypeஆனது மைக்ரோசொப்டின் Windows
மற்றும் அப்பிளின் Mac ஆகியவற்றிற்கு என தனது புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.
முன்னைய பதிப்பில் Skype-இல் இருந்து பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்து
நண்பர்களுடன் சட்டில் ஈடுபடும் வசதி தரப்பட்டிருந்தது. ஆனால் புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பின் மூலம் மைக்ரோசொப்ட் கணக்குகளில் உள்நுழையும் வசதியும், அவ்வாறே நண்பர்களின் Windows Live Messenge கணக்கிற்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய வசதியினையும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக ஆறு மொழிகளையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இப்பதிப்பினை விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen