செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Lovi. |
உலகளாவிய ரீதியில்
தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது விண்டோஸ் 8
இயங்குதளத்தினைக் கொண்ட LG H160 எனும் Sliding Tablet - இனை
அறிமுகப்படுத்துகின்றது.
இதில் 11.6 அங்குல அளவுகொண்ட LCD IPS தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 178 டிகிரி
வரையான பார்வைக் கோணத்தைக் கொண்டதுமான தொடுதிரையினை காணப்படுகின்றது. மேலும் 1.05kg எடைகொண்ட இந்த tablet 15.9mm தடிப்புடையதாகக் காணப்படுவதுடன் 1 x USB, 1 x HDMI port, microSD card slot மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. LG H160 Tablet விலையானது இதுவரையில் நிர்ணயிக்கப்படாத போதும் விண்டோஸ் 8 இயங்குதளம் எதிர்வரும் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen