செல்வச்சந்நிதி ஆலயத்தில் கரகம் எடுத்து வந்தவர்களை அவமதித்த பொலிஸ் அதிகாரி பிரியதர்ஸன

 
 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
வரலாற்று புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்று முன்நாள் இரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸார் நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது.
நேற்று முன்நாள் இரவு வழமை போன்று சப்பறத்திருவிழா அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. அங்கு தமது நேர்த்திக்கடன்களை அனுஸ்டிக்கவென பலரும் காவடிகளை எடுத்த வண்ணமிருந்தனர்.
அதேபோன்று நேற்று தேர்த்திருவிழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் படையெடுத்து வந்தவண்ணமிருந்தன.
இவ்வாறு நேற்றிரவு ஆலயத்திற்கு கரகாட்டமாடி வந்தவர்களே தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கரகாட்ட கலைஞர்கள் பெண் யுவதிகளை போன்று வேடமணிந்து கரகாட்டமாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்று சேர்ந்த வல்வெட்டித்துறை பொலிஸ நிலைய அதிகாரியான பிரியதர்சன மற்றுமொரு அதிகாரி சகிதம் கரகாட்டம் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி கலைஞர்களை தாக்கியுள்ளார்.
அத்துடன் திரண்டிருந்த பக்தர்களிடையே குறித்த கரகாட்ட கலைஞர்களது ஆடைகளை கழைந்து அவமதித்துள்ளனர்.
ஆண்டு தோறும் இவ்வாறு தாங்கள் கரகாட்டமாடி நேர்த்தி கடனை நிறைவேற்றுவதாக அக்கலைஞர்கள் கூறிய போதும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
இச்செயல் பல தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி மீது பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றசசாட்டுக்கள் ஏற்கனவே எழுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தககது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.