வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன்
ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று
நடைபெற்றது.
காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்கதர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. | |||||
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen