21.09.2012.By.Lovi.எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ்க்கான லங்கா பிஸ்னஸ் கொலிஷன் (LBCH) மூலம் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றுநோய்கள் குறித்த கல்வி மற்றும் தகவல்களை வழங்கும் முகமாக www.lbchconnect.com என்ற இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தேசிய பணிப்பாளர் டொங்ளின் லீ கலந்து கொண்டிருந்தார்.
இந்த இணையத்தளம் குறித்து LBCH இன் தற்போதைய தலைவரும், ஸ்ரீலங்கா பிஸ்னஸ் ஒபரேஷன்ஸ் நிறுவனத்தின் தேசிய தலைவரும், செவ்றோன் லுப்ரிகன்ட்ஸ் லங்காவின் தலைவருமும் பணிப்பாளருமான கலாநிதி. கிஷ_ கோம்ஸ், கருத்து வெளியிடுகையில்; “இவ் இணையத்தளமானது காலத்தின் தேவை. இலங்கையின் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை துறைகளை சேர்ந்த பெரும்பாலானவர்களை சென்றடையும்" என தெரிவித்தார். மேலும் "LBCH ஆனது மக்களுக்கு ஏற்படுகின்ற தொற்றுநோய்கள் குறித்து கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவுள்ளது" என்றார்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen