22.09.2012.By.Lovi.சுவிஸ்
அரசின் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிக்
கூறுகையில், உலகளவில் பொருளாதாரச் சரிவு அதிகமாகி வருகின்றது, ஆனால்
சுவிட்சர்லாந்து அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாது என்றனர்.
அரசு பொருளாதாரத் துறையில் (சிகோ) நிபுணர்கள், 2012ம் ஆண்டின் பொருளாதார
மேம்பாடு 1 சதவீதமாக இருக்கும் என்றனர். யூன் மாதம் இவர்கள் இப் பொருளாதார மேம்பாடு
1.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தனர். இந்த ஆண்டு பணவீக்கம் -0.5 சதவீதமாக
உள்ளது. முன்பு -0.4சதவீதமாக இருந்தது. சர்வதேச அளவிலான பொருளாதாரத் தொய்வு நிலை சுவிட்சர்லாந்துக்கும் வந்துவிட்டதாக சீகோவின் பொருளாதார நிபுணர்கள் கூறினர். ஆனால் இந்தத் தொய்வு நிலை அதி சீக்கிரமாக சுவிட்சர்லாந்துக்கு வந்துவிடாது. ஏனெனில் சுவிட்சர்லாந்தின் உள்ளூர் பொருளாதாரத்தின் அசுரத் தனமான வளர்ச்சியும், யூரோவுக்கு எதிரான செலாவணி மதிப்பும் வலுவாக இருக்கின்றன. ஒரு வருடத்துக்கு முன்பு 1 யூரோவுக்கு 1.20 சுவிஸ் ஃபிராங்க் என்று நாணய மதிப்பை சுவிஸ் தேசிய வங்கி நிர்ணயித்துவிட்டதால், சுவிஸ் பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பித்துவிட்டது. ஆனால் தனது சுவிஸ் பிராங்க் நாணயமதிப்பை அமெரிக்காவின் டொலருக்கு எதிராகவோ வேறு எந்த ஆசிய நாட்டுச் செலாவணிக்கு எதிராகவோ நிர்ணயிக்க முடியவில்லை என்றும் "சீகோ" நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே தனது அருகிலிருந்த ஐரொப்பிய நாடுகளோடு சுவிட்சர்லாந்து தனது பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் ஏற்றுமதித் துறையை விடச் சிறப்பாக உள்ளது. ஏற்றுமதித் துறை பல்வேறு நாடுகளின் பொருளாதாரச் சிக்கலால் வளர்ச்சியின்றி தேக்கநிலையில் காணப்படுகின்றது. உள்ளூர் பொருளாதாரச் சிறப்புக்கு, குறைந்த வட்டி விகிதம், நுகர்வோரின் வாங்கும் விலை குறைவு மற்றும் அதிகமானோர் புலம்பெயர்ந்து வந்த நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சர்வதேசப் பொருளாதாரச் சூழ்நிலை ஆரோக்கியமாக இல்லாததாலும் ஜேர்மனி, சீனா போன்ற இராட்சத சந்தைகள் பலவீனப்பட்டதாலும் சுவிஸ்ஸின் ஏற்றுமதித் தொழில் பாதிப்படைந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி, யூரோ மண்டல அரசின் பத்திரங்களை வாங்கத் திட்டமிட்டதால் இந்த நெருக்கடி பெரிதாகவில்லை என்று "சீகோ" நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். கடந்த வாரம் சுவிஸ் தேசிய வங்கி இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை ஒரு சதவீதமாகக் குறைத்து முன்னறிவிப்புச் செய்தது. "சீகோ" யூரோமண்டலம் பொருளாதாரச் சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அமெரிக்காவில் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. |
சுவிஸ் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen