23.09.2'012.By.Rajah.ஜேர்மனியில் ஏடிஎம் இயந்திரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதால், திருடர்கள் பொதுமக்களின் வங்கி கணக்குகளை
பெற மாற்று வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் ரயில் பயணச்சீட்டு பெறும் இயந்திரங்களின் மூலமாக பொதுமக்களின் ரகசிய
எண்களையும், பிற வங்கி விபரங்களையும் கள்ளத்தனமாக பெறுவதாக மத்திய குற்றவியல்
காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதிரி 25 குற்றச்சாட்டுகள் கடந்தாண்டு மட்டும் பதிவாகி உள்ளதாக பிரபல பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் மக்களின் கடனட்டை மூலமாக தகவல்களை திருடுகின்றனர், மற்றும் ஒரு சிறிய ஒளிப்படக் கருவியை பொருத்தியும் ரகசிய எண்களை அறிந்து கொள்கின்றனர் அல்லது புதிதாக ஒரு போலி தட்டச்சு பலகையை ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியும் ரகசிய எண்களை திருடுகின்றனர். இது குறித்து மத்திய குற்றவியல் காவல் தலைவர் ஜோக் சியர்கெ கூறுகையில், தகவல் திருட்டை தடுக்கும் தொழில்நுட்பத்தை 64,000 ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியுள்ளோம். இதனால் கடந்த 2010ஆம் ஆண்டில் 3180ஆக இருந்த திருட்டு கடந்த 2011ஆம் ஆண்டில் 1300 ஆகக் குறைந்து விட்டது என்றார். |
ஜேர்மனியில் புதுவித வழியை பின்பற்றும் திருடர்கள்
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen