Friday28September2012 By.Rajah. தொழிலாளர்களால் செய்யப்பட்ட புட்பால் ஆர்டரை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா நிறுவனம்.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது ஷெரின் புட்பால் கம்பெனி. இந்த கம்பெனி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புட்பால் தயாரிப்பு கான்ட்ராக்டரிடம் புட்பால் தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்தது. அதன்படி, புட்பால்கள் தைத்து அனுப்பப்பட்டன.
அவை ஆஸ்திரலியாவின் பல பகுதிகளில் விற்பனையாயின. மெல்பர்ன் நகரில் வசிக்கும் 6 வயது சிறுவனின் தந்தையும் ஒரு புட்பால் வாங்கி உள்ளார். அதில், தையல் ஊசி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷெரின் நிறுவனத்தில் புகார் தெரிவித்தார்.
இதே போல் வாடிக்கையாளர்கள் சிலரும் புகார் கூறியதால், உடனடியாக ஷெரின் நிறுவனம் தீவிர விசாரணை நடத்தியது. அப்போது, ஜலந்தரில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி புட்பால் தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஷெரின் நிறுவன நிர்வாக இயக்குனர் கிறிஸ் லம்பெர்ட் கூறுகையில், இந்த ஆண்டு மட்டும் 9,000 புட்பால்களை தைத்து கொடுக்க இந்திய கான்ட்ராக்டருக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அவை குழந்தை தொழிலாளர்களால் தைத்து வழங்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, அவற்றை நிராகரித்து விட்டோம். மேலும், 4.5 லட்சம் புட்பால் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டோம் என்றார்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen