யூஸ் அண்ட் த்ரோ பைக்
29.09.2012.By.Rajah.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ( யூஸ் அண்ட் த்ரோ ) பேனா, டம்ளர், ஏன் செல் போனைக் கூட பார்த்திருப்போம். ஆனால் யூஸ் அண்ட் த்ரோ “பைக்”கை பார்த்ததுண்டா ? பார்க்கவேண்டுமென்றால் அதற்கு நாம் இரண்டாம் உலகப்போருக்கு தான் செல்ல வேண்டும். ஆம் இரண்டாம் உலகப்போரில் தான் இந்த யூஸ் அண்ட் த்ரோ பைக்”கள் பயன்படுத்தப்பட்டன.
உலகப்போரில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் விமானத்திலிருந்து பராசூட் மூலம் கீழே இறக்கிவிடப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு சைக்கிள் வழங்கப்படும். அதன் மூலம்தான் அவர்கள் போர்முனையை அடைவார்கள். ஆனால் சாலைகள் சரியாக இல்லாத அந்த காலத்தில் சைக்கிளில் போர்முனையை அடைவது மிகவும் சவாலாகவே இருந்தது. இதனால் போருக்கு முன்னரே வீரர்கள் களைத்துப் போயினர். இதனால் சைக்கிளுக்கு பதிலாக சிறியரக பைக்’குகளை வழங்க ஆங்கில அரசு முடிவெடுத்தது
எக்ஸ்செல்சியர் என்ற பைக் நிறுவனத்திடம் சிறியரக பைக்’குகளுக்கு ஆர்டர் கொடுத்தது. அந்நிறுவனம் சிறியரக பைக்’குகளை தயாரித்து அதற்கு “வெல்பைக் ” என பெயரிட்டது. சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளின் அளவே இருக்கும் இந்த பைக்’கின் நீளம் 778 மி.மீ. 98 சி.சி. திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் என்ஜின் கொண்டது. எடையோ வெறும் 22 கிலோதான். தயாரிக்கும்போதே இதன் எடையை முடிந்த அளவு குறைத்துள்ளனர் இதன் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது சிரமம் இருக்ககூடாது என்பதற்காக. இதனால் தான் சாதாரண பைக்’குகளில் இருக்கக்கூடிய லைட், ஸ்டாண்டு, மட்காட், ஹாரன், எர்பில்டர், செயின்கவர், ஆகியவை இந்த பைக்கில் பொருதப்படவே இல்லை. மேலும் பெடலும் இல்லை இதனால் தள்ளிக்கொண்டே சென்று தான். ஸ்டார்ட் செய்யவேண்டும்.
யூஸ் அண்ட் த்ரோ
இந்த பைக் தயாரிக்கபட்டபோதே கழற்ற இயலாதவாறு சீல் செய்யப்பட்ட இரண்டு பெட்ரோல் டேங்குகளுடன் தயாரிக்கப்பட்டது. ஒருமுறை ஓட்டி பெட்ரோல் தீர்ந்துவிட்டால் அவ்வளவுதான் மீண்டும் பெட்ரோல் நிரப்பமுடியாது. பைக்கை தூக்கி எறியவேண்டியது தான். இரண்டு பெட்ரோல் டேங்குகள் எதற்கு என்று தெரியுமா ? ஒன்று வண்டியை ஓட்டுவதற்கு. மற்றொன்று வண்டியை எரிப்பதற்கு. ஆம் வீரர்கள் போர் முனையை அடைந்தவுடன் எதிரிகளுக்கு எவ்வித தடையமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பைக்கை எரித்துவிட வேண்டுமென்று ஆங்கில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த மாடலில் மொத்தமாக 4,000 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் அதில் பெரும்பானவை அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது நூற்றுக்கணக்கான பைக்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவை சர்வதேச சந்தையில் மூவாயிரம் முதல் நான்காயிரம் டாலர்கள் வரை விலைபோகின்றன.
மேலும் பல வியப்பூட்டும் தகவல்கள் அடுத்த பதிவில் உங்களுக்காக காத்திருகிறது .அடுத்த பதிவில் சந்திப்போம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen