27.09.2012.By.Rajah.சர்வதேச அளவில் தேடல்
தளங்களில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கும் கூகுள் தளம் தனது 15வது ஆண்டில்
அடியெடுத்து வைக்கின்றது.
இன்று கூகுள் தளத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப
செய்தியாக கூகுள் பிறந்தநாள் இருக்குமென்றால் அது மிகையாகாது. கூகுள் பக்கத்திற்கு சென்றதும் கேக், மெழுகுவர்த்தியுடன் 14 ஆம் ஆண்டை குறிக்கும் Doodle ஆனது திரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கூகுள் தளமானது சட்டப்படி பதிவு செய்யப்பட்டு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியது. கடந்த 2005ஆம் ஆண்டு வரை செப்டம்பர் 7 திகதியை பிறந்தநாளாக கொண்டாடிய கூகுள் நிறுவனமானது, சில ஆதாரபூர்வ தகவலின் படி தனது பிறந்தநாளை செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியாக மாற்றி கொண்டாடுகின்றது. சரியான பிறந்தநான் திகதியினை கண்டுபிடிப்பதற்கு கூகுளிற்கு IBN உறுதுணையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen