ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500 குழந்தைகள் பாதிப்பு

30.09.2012.By.Lovi.ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பெர்லின், பிராண்டன்பெர்க், சேக்சனி, துரிங்கியா பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு இருப்பதாக ராபர்ட் கோச் பொது சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் பாதிப்புக்கு குழந்தைகள் சாப்பிட்ட உணவு தான் காரணம் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்லினில் 2200 பேரும், சேக்சனியில் 2000 பேரும், பிராண்டன்பெர்கில் 1500 பேரும் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் நடவடிக்கை துறையின் அமைச்சரான இல்சே ஐங்னர், நோயின் காரணத்தை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Sodexo என்ற உணவு சேவை நிறுவனம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியிருப்பதால் அந்த நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீபன் டுர்ஹோல்ட், நாங்கள் உணவு வழங்கும் பள்ளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே நோய்ப்பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே இந்த வைரஸ் தாக்குதலுக்கும், நாங்கள் வழங்கிய உணவுப் பொருளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
குழந்தைகளை தாக்கியதாக கருதப்படும் “நோரோ வைரஸ்” வாந்தி, வயிற்றுப்போக்கை உருவாக்கும். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு எதிதாகத் தொற்றிக் கொள்ளும். உணவு, நீர், பாதிக்கப்பட்டோர் அல்லது தொற்றுக்குள்ளான ஏதேனும் ஒரு பொருள் மூலமாக விரைவில் பரவும் தன்மை கொண்டது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.