சபரிமலை ஐயப்பன் கோவிலை தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். பின்னர் இதுகுறித்து உம்மன்சாண்டி அளித்த பேட்டியில், "சபரிமலை ஐய்யப்பன் கோவில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் இருப்பதாலும், புலிகள் சரணாலயம் உள்ளதாலும் இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது. இதனால் திருப்பதி மற்றும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளைப் போல சபரிமலை வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவித்தால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen