முருகப்பெருமான், சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்த நாள்தான் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்ய கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பழனிக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். பழனி கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் 24–ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
சாமிக்கு காப்பு கட்டுதலுடன் ஏராளமான பக்தர்களும் காப்புகட்டி விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது சுப்பிரமணியர் வள்ளி, தெய் வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்வார். மாலையில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிகச் சொற் பொழிவுகள் நடைபெறுகின்றன. இந்த விழா நாட்களில், பக்தர்கள் தொடர்ந்து ஏழு நாள் விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்வர். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து , நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கண்ணாடிக்கு அபிஷேகம் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். " சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
அன்று மாலை, அடிவாரம் நான்குரதவீதிகளிலும், சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் பத்மாசூரன், கதமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானு கோபன் ஆகிய சூரன்களை சுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மலைக்கோவிலில் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen