இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால், நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இ
டிக்க வேண்டும் என்கிறார்கள்.பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் கட்டுகிறார்கள். ஆனால் பணம்
இல்லாதவர்கள் கடனை வாங்கி கட்டிய வீட்டை எவ்வாறு இடித்துக் கட்ட முடியும். அவ்வாறு வீடு இடித்துக் கட்டாமல் இருப்பதற்கு
வழி உண்டா?ஒவ்வொரு வீடுகளுக்கும் அதற்கு கட்டக்கூடிய அமைப்பின்படி வயது உண்டு. நாம் ஒரு கல்லைச் சிலையாக செய்ய வேண்டும் என்றால் கூட அந்த கல்லை ஆண் கல்லா இ பெண் கல்லா என்று
பார்க்க வேண்டும்.
ஆண் கல் என்றால் கல் மதம் வரும்.பெண் கல் என்றால் கல் பிசின் வரும். அலித்தன்மை உள்ள கல்லுக்கு கல் மதமும், கல் பிசினும் வரும். இவ்வாறு கல்லில் மூன்று வகைகள் உண்டு. பெண் கல் என்றால் பெண் சிலையாக வடிக்க வேண்டும். ஆண் கல் என்றால் ஆண் சிலையாக வடிக்க வேண்டும். சிற்பி கல் சிலையை செதுக்கும் பொழுது அவருடைய கால்கள் சிலையின் எந்த பாகத்திலும் படலாம்.
சிற்பி உருவத்தை முழுமையாக செதுக்கிவிட்டு கை விரல்களில் நான்கை மட்டும் செதுக்கி பின் கண்களை திறந்து விட்டால் சிலைக்கு உயிர் உண்டாகிவிடும். அதற்குப் பின் சிற்பியின் கால்கள் சிலையின் மேல் படக்கூடாது. ஏன் என்றால், கண்ணை திறந்து விட்டால் அந்தச் சிலைக்கு உயிர் வந்துவிடும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen