பிள்ளையார் ஆலயத் திருவிழாவில் பூ மாரி மழை பொழிந்த ஹெலிஹொப்ரர்

இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா
 வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.சோழ இளவரசி சீர்பாத தேவியினால் உருவாக்கப்பட்ட வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான
 பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை நேற்று பிற்பகல் விசேட பூஜைகள் நடைபெற்று, யானைகள் புடைசூழ ஊர்வலமாக வந்த பஞ்சமுக கணபதி தேரில் ஆரோகணம் செய்த காட்சி 
அனைவரையும் மெய்சிலிக்க வைத்துள்ளது.  அத்துடன் உலங்கு வானூர்தியின் மூலமாக பூ மழை பொழிய இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.