யாழ் நாவற்குழியில் கருங்கற்களால் அமைக்கப்பட்ட திருவாசக அரண்மனை 24.06.2018.அன்று திறந்து வைக்கப்பட்டது.விநாயக வழிபாட்டுடன் தவில் நாதஸ்வர இசையுடன், கருங்கற்களில் பொறிக்கப்பட்ட 658 பாடல்களை
கொண்ட, 11 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருவாசகப் பாடல்களை உள்ளடக்கிய அரண்மனை விருந்தினர்களால்
திறந்து வைக்கப்பட்டது
.வாசகம் பொறிக்கப்பட்ட அரணின் ஒவ்வொரு தூண்களின் இடை வெளியிலும் நான்கு சிவலிங்கம் மற்றும் நான்கு மணிகள்
வீதம் 108 சிவலிங்கமும் 108 மணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தட்சணா மூர்த்திக்கு அமைக்கப்பட்ட ஆலயத்தின் வழிபாட்டை தொடர்ந்து 21 அடியில் தங்க முலாம் பூசப்பட்ட பாம்புச் சிவலிங்கம் இருக்கும், கருங்கல்லில் அமைக்கப்பட்ட தேர் திறந்து
வைக்கப்பட்டது.
அரண்மனை உருவாக்குவதற்கு பலவழிகளும் பாடுபட்ட சிற்பக்கலைஞர், கட்டடக் கலைஞர், செப்பு வேலை கலைஞர், கருங்கல் வேலைப்பாடுக் கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி பதக்கம் வழங்கி
மதிப்பளிக்கப்பட்டனர்.கருங்கற்களால் பொறிக்கப்கப்பட்ட எழுத்து
வேலைகளை
செய்தவர் மாவீரர் துயிலும் இல்லங்களின் பெயர்களை கருங்கல்லில் பெயர் பொறிக்கும் இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசக அரண்மனை நூலும் வெளியிடப்பட்டது. இந்த நூலை சிவபூமி அறக்கட்டளையின் பொருளாளர் குகதாசன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்வர்
பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் விருந்தினர்களாக ஆஸ்திரேலியா மருத்துவ நிபுணர் கலாநிதி மனமோகன் மருத்துவ கலாநிதி சிவகௌரி தம்பதியினர், கொழும்பு மனித நேய அறக்கட்டளை தலைவர் அபிராமி கயிலாசபிள்ளை, கம்பவாரிதி இ.ஜெயராஜ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசியர் தி.பாலசந்தர் தேசிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen