சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
 
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையான சக்தி பீடமாக கருதப்படுகிறது. பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக் கோயில் அம்மனின் தனிச்சிறப்பு.
பச்சைப் பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்திகளையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் உள்ளிட்ட 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாள்களில் அம்பாள் அருள்புரிந்து வருவது இக்கோயிலின் புராண மரபு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் சித்திரை தேரோட்ட விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தினசரி காலையில் பல்லக்கு புறப்பாடும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தொடர்ந்து, தேர் கோயிலைச் சுற்றி வலம் வந்து பிற்பகல் 1.40 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவை முன்னிட்டு 1,200-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
17-ஆம் தேதி முத்துப்பல்லக்கும், 18-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும்  நடைபெற்றன..

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.