ஒன்பது நவக்கிரகங்களுள் சனிபகவான் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்யும் கிரகமாவார். அதனாலேயே அவருக்கு மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. வான வீதியில் ஒருபாகை தூரத்தை கடந்து செல்வதற்கு சராசரியாக ஒருமாத காலம் ஆகிறது.
ஆகையால் சனிக் கிரகத்தின் சராசரி தினசரி கலைகள் ஆகின்றன. வக்ரம், அதிகாரம் இரண்டு நிலைகளிலும் இந்த காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள் கதிகளின் முடிவாகும்.
இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையை கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு மாத காலமும் சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலமாகவே கொள்ள வேண்டும்.
எனவே சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்ட 15 நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சனிபகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண நற்பலன்களைத்தரும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen